கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்ததைப் போன்ற ஒரு சம்பவம் அருணாசலப் பிரதேசத்தில் டிசம்பர் 9-ம் தேதி நிகழ்ந்தது. தவாங் செக்டாரில் எல்லைக்கோட்டை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் சீனத் துருப்புகள் நுழைந்ததைக் கண்ட இந்திய வீரர்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. அதில், இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. ஆனால், உயிரிழப்பு எதுவும் இல்லை,

ஆனாலும், இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. இந்த மோதல் சம்பவம் குறித்து எந்தவொரு செய்தியையும் மத்திய அரசு வெளியிடவில்லை. ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குப் பிறகுதான் இது வெளியுலகுக்குத் தெரியவந்தது. இது குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை நோக்கி விமர்சனங்களை எழுப்பினர். அதையடுத்து, பா.ஜ.க-வினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே சூடான வார்த்தைப் போர் நடைபெற்றது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்
twitter

இந்தச் சூழலில்தான், இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றிய சம்பவம், தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள ராணுவத் தலைமையகத்திலிருந்து காணொளி வாயிலாக, இந்திய பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினர் மத்தியில் ஜி ஜின்பிங் உரையாற்றினார் என்று சீன வானொலி செய்தி வெளியிட்டிருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor