கடந்த ஒரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலினுடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்தது. 

இளங்கோவன் போட்டியா?

பெரும்பாலும் இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் போட்டியிடுவதாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. என் இளைய மகனுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். தலைமை எடுக்கும் முடிவை நான் வரவேற்பேன் என சென்னையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார். 

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி..கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்;-

news reels

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி.கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்னதற்கு நன்றி.

இளைய மகன்

காங்கிரஸ் வேட்பாளரை ஓரிரு நாளில் காங்கிரஸ் தேசிய தலைமை அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், இளைய சமுதாயத்தை சார்ந்தவர்கள் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தில் இருந்து ஒருவர் நிற்கவைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் சொன்னதால் இளைய மகனுக்காக கோரிக்கை வைத்துள்ளேன். கட்சியில் மற்ற சிலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனவே காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுப்பார்கள் தலைமை எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.

அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள் அ.தி.மு.க.விடம் ஒற்றுமை இல்லை,குழப்பத்தில் இருக்கிறார்கள் அதிமுகவை பொருத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ்,தினகரன் சசிகலா என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 4 பேரும் சேர்ந்து வந்தாலும் தனித்தனியாக வந்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

காங்கிரசுக்கு சவாலா?

காங்கிரசுக்கு சவால் இருக்கிறது என்று சொல்ல முடியாது. திமுக கூட்டணியும் இருப்பதால் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது.பாஜக ஊதி பெரிதாக்கப்பட்ட பலூனை போன்றது.தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக. சொல்வது பொய்.மூன்றாவது இடம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தான்.
அகில இந்திய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மாவட்ட கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையும் பாஜகவும் வெத்து வெட்டு என்பது இந்த தேர்தலில் தெரியும்.” என தெரிவித்தார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor