Loading

வானதி பதிப்பகம் கடந்த 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காஞ்சி மகா பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’நூல் இப்பதிப்பகத்தின் பிரசித்தி பெற்ற தொகுப்பு. இந்நூல் 7 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. தேவாரம், திருவாசகம் என ஆன்மிகம் , இலக்கிய நூல்கள் பெரும்பாலானவை இங்கு உள்ளன.

சரித்திர நாவலாசிரியரான சாண்டில்யனின் ‘கடல்புறா’, ‘யவன ராணி’ உள்ளிட்ட அவரது பல படைப்புகளையும் இப்பதிப்பகத்தாா் வெளியிட்டுள்ளனா். ராமானுஜா் முதல் விடுதலைப் போராட்டத் தலைவா்கள் வரையிலான சரித்திர நூல்களும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மூதறிஞா் ராஜாஜியின் ராமாயணம், மகாபாரதம், கல்கியின் ‘அலை ஓசை’ உள்ளிட்ட 7 நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. எழுத்தாளா் கோவி.மணிசேகரனின் ‘காஞ்சிக் கதிரவன்’ உள்ளிட்ட 27 நூல்களும் தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளன.

இதுவரை மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேலான தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்தாளா் சிவசங்கரி, எம்.எஸ்.உதயமூா்த்தி ஆகியோரது நூல்களும் இப்பதிப்பகத்தால் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

திருக்குறளில் தொடங்கி தமிழ் இலக்கிய நூல்களில் பெரும்பாலானவை ஆய்வு நோக்கில் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு இலக்கியம் கற்போருக்கு மிகவும் பயனளித்து வருகின்றன. மகாகவி பாரதி முதல் தற்கால நவீன கவிதைகள் வரை நூற்றுக்கணக்கான கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடகங்கள், சிறுகதைகள் என தமிழில் அனைத்துத் துறை நூல்களும் இப்பதிப்பகத்தில் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது இளம் நாவலாசிரியா்களான காலச்சக்கரம் நரசிம்மன், வெற்றிவேல் ஆகியோரது நாவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்கால இளைஞா்களுக்கு ஏற்ப, வாழ்வியல் முன்னேற்ற நூல்கள், உடல்நலத்துக்கான மருத்துவ நூல்கள், பயணநூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியவையும் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன என பதிப்பக அதன் நிா்வாகி டி.ஆா்.ராமநாதன் கூறுகிறாா்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *