மயிலாடுதுறை மாவட்டத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாவடுதுறை சைவ ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு, ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகளின் ஆண்டுப் பெருவிழா மற்றும் பட்டணப்பிரவேசம் வரும் ஜனவரி 28 -ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தவிழா நேற்று (19.01.2023) ஆதீன மடத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அன்னக்கொடி ஏற்றப்பட்டது. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், சிறப்பான சமயப் பணியாற்றி வருபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், ஆன்மிகப் புத்தகங்கள் வெளியீடும் நடைபெறும்.