ஹூஸ்டன்,-அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டதை அடுத்து, அங்குள்ள ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோசில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு ஓம்கார்நாத் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஒரே கோவில் இது தான். இதற்குள், ௧௧ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர், அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பிச் சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து, கோவில் வாரியக் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாச சங்கரி கூறியதாவது:
இச்சம்பவத்தால், எங்கள் கோவிலுக்குள் அத்துமீறல் நடந்துள்ளது. இந்த திருட்டால், எங்களின் தனிப்பட்ட உரிமையை இழந்துஉள்ளதாக உணர்கிறோம். இனி, கோவிலின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவோம். இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
