தென்ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடியபோது அந்த அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கு தென்னாப்பிரிக்கா ரசிகர் ஒருவர் மேரேஜ் புரொபோசல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கும் போதெல்லாம், அந்த அணியை உற்சாகப்படுத்த அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனும் களமிறங்குவார். இதனால் கேமரா அவரை எப்போதும் சுற்றி வட்டமடிக்கும். இதனால், சமூக வலைத்தளங்களில் காவ்யா மாறன் மிகவும் பிரபலமாகி, பல இளைஞர்களுக்கு கனவு கன்னியானார். 

அதேபோல், போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் ஏலம் நடக்கும்போது, எந்த வீரரை எந்த விலைக்கு வாங்குவது என்பது குறித்து காவ்யா மாறன்தான் முடிவு எடுப்பார். ஐபிஎல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஓடிய பிறகும் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். 

இந்தநிலையில், காவ்யா மாறனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்துவரும் SAT20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை போன்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணி களமிறங்கியுள்ளது. இதற்கு இணை உரிமையாளராக காவ்யா மாறனே இருந்து வருகிறார். 

 நேற்று, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ராஜஸ்தான் அணியின் மற்றொரு அணியுமான பேர்ல் ராயல்ஸ் அணியும் மோதினர். பேர்ல் மைதானத்தில் நடந்த போட்டியை காவ்யா மாறன் நேரடியாக பார்க்க சென்றிருந்தார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர் புல் மீது அமர்ந்து ஒரு அட்டையை அசைத்து கேமராக்களின் கவனத்தையும் ஃபோகஸையும் ஈர்த்தார். அப்போது, அந்த தென்னாப்பிரிக்கா ரசிகர், தனது கையில் ஒரு பதாகையுடன் ’காவ்யா மாறன் வில் யூ மேரி மீ’என்று பலகையில் எழுதி வைத்திருந்தார். தற்போது இது தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யார் இந்த காவ்யா மாறன்? 

சன் அதிபர் கலாநிதி மாறனின் ஒரே மகள் ஆவார்.  இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பிறந்தார். எம்.பி.ஏ படித்துள்ள இவருக்கு பயணம் செய்வதிலும், இசையிலும் மிகுந்த ஆர்வம் உள்ளது. 31 வயதான இவருக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றால் அவ்வளவு விருப்பம். இதன் காரணமாகவே,  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இவர் சன் டிவியின் சன் மியூசிக் சானலில் தலைமை பொறுப்பிலும் உள்ளார். மற்றும் இதர சன் நிறுவனத்தின் சேனல்களை நிர்வகித்து வருகிறார். 

சோசியல் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருக்கும் காவ்யா மாறனுக்கு, ட்விட்டரிலோ, இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கிலோ அதிகாரபூர்வ கணக்கு இல்லை. ஆனால், அவர் பெயரில் நிறைய ஃபேக் ஐ.டிக்கள் இருக்கின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor