சிவகங்கை: சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளர்கள் 3 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ராஜா (23), மதிமாறன் (21), அய்யங்காளை (24). இவர்கள் மூவரும் 2021 செப்.24-ம் தேதி ஐந்தரை வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மானாமதுரை மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராஜா, மதிமாறன், அய்யங்காளை ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.7 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.