2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் ஸ்கோர் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்  பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல்கட்டமாக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை இன்று ஆற்றினர். ஷமி 3, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து 109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

Low total vs #NewZealand always reminds me of this match.
India lost here by 47 runs wile chasing 127. #INDvNZ #IndvsNZ2ndODI #INDvsIND pic.twitter.com/G9aHuhtk2f
— Sameer (@sameerdhiman37) January 21, 2023

108 என்ற இலக்கை இந்திய வீரர்கள் எளிதில் அடித்துவிடுவார்கள் என்பது நிச்சயம்தான். ஆனாலும், இந்தப் போட்டியின் போது நியூசிலாந்து 108 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர் சோஷியல் மீடியாவில் 2016 ஆண்டு நடைபெற்ற போட்டியின் ஸ்கோர் கார்டு வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்ன அந்தப் போட்டியில் ஸ்பெஷல்? வாங்க விரிவாகப் பார்க்கலாம்.

image

2016ல் அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து!

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி  நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் ஒரு போட்டிதான் இது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 127 ரன்கள் தானே இலக்கு; இந்திய அணி எளிதில் அடித்துவிடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா என பெரிய பேட்டிங் பட்டாளமே இருந்தது. போதாதற்கு ஜடேஜா, அஸ்வின் போன்ற ஆல் ரவுண்டர்களும் இருந்தனர். ஆனால், ரோகித் சர்மா, 5, தவான் 1, ரெய்னா 1, யுவராஜ் சிங் 4 என வரிசையாக பெவிலியன் திரும்பிவிட்டார்கள். இந்திய அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

காப்பாற்ற முயற்சித்த தோனி.. ஆனால்!

image

நெருக்கடியான சூழலில் களம் இறங்கினார் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் தோனி. அவர் ஒருபுறம் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தாலும் விராட் கோலி 23, ஹர்திக் பாண்டியா 1, ஜடேஜா 0 ஆகிய மூன்று பேரும் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி அளித்தனர். 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி. இருப்பினும் அஸ்வினை வைத்துக் கொண்டு விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் 10 ரன்கள் எடுத்த நிலையில் 8வது விக்கெட்டாக அஸ்வின் வெளியேறினார். அதுவரை சமாளித்த தோனியும் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் நெஹ்ராவும் ஆட்டமிழக்கம் இந்திய அணி 79 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. வெறும் 126 ரன்களே எடுத்து நியூசிலாந்து பட்டையை கிளப்பிய இந்தப் போட்டியை, இன்று சோஷியல் மீடியாவில் பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

image

இன்றையப் போட்டியின் முடிவு – இந்தியா அபார வெற்றி

109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். விக்கெட்டை பறிகொடுக்காமல் ரன்களை சேர்த்தனர். 72 ரன்னில் தான் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணி. ரோகித் சர்மா 50 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

image

பின்னர் வந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்னில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20.1 ஓவரில் 111 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் சுப்மன் கில் 40(53) ரன்னும், இஷான் கிஷன் 8 (9) ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor