சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவை இல்லாமல் வாழவே முடியாது என்பர். சிலர் ஒன்று அல்லது இரண்டு செல்லப்பிராணிகளை வளர்ப்பர். சிலர் வீடுமுழுக்க பிராணிகளை வைத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். ஆனால் அதில் ஒருசிலர் உச்சநிலைக்கு சென்று அந்த விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவர். இவர்களை “தேரியன்கள்” (therians) என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களை ’மனிதனல்ல விலங்கு’ என்றே பாவித்துக்கொள்கின்றனர்.

அதுபோன்ற விசித்திரமான ஒருவர்தான் டியாமட் ஈவா மெடூசா. இவர் அதீத உடல் மாற்றங்களை செய்து தன்னை ஒரு விலங்குபோலவே மாற்றியிருக்கிறார். அதவாது உயிருடன் இருக்கும் விலங்குபோல் இல்லை; புராண கதைகளில் வரும் ட்ராகன் போல் தன்னை மாற்றி அமைத்திருக்கிறார் மெடூசா.

image

தன்னை ட்ரான்ஸ் பெண் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் மெடூசா, காது, மூக்கு, நாக்கு என அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளார். முன்னாள் வங்கி ஊழியரான இவர், பல்வேறு அறுவைசிகிச்சைகள்மூலம், காது மற்றும் மூக்கு துவாரங்களை நீக்கி, கண்களை பச்சை நிறமாக்கி, தனக்கு கொம்பும் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை செலவழித்து தனது நாக்கை ஃபோர்க் போல் மாற்றியுள்ளார். தலை, முகத்தில் கட்டுவிரியன் பாம்பு போன்றும் மற்றும் உடல் முழுவதுமே டாட்டூக்களை குத்தி தன்னை முழுக்க முழுக்க ஒரு ட்ராகன் போலவே மாற்றி அமைத்துள்ளார்.

image

மெடூசா குறித்து Vice News கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், மெடூசா அமெரிக்காவிலுள்ள ஆரிசோனா மாகாணத்தில் ரிச்சர்டு ஹெர்னாண்டஸாக பிறந்துள்ளார். பின்னர் அறுவைசிகிச்சை மூலம் பெண்ணாக மாறி டியாமட் ஈவா மெடூசாவாக உருவாகியுள்ளார். ஆனால் அப்போதும் பாகுபாடு, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளார் மெடூசா. அதன்பிறகு மனிதர்களுடனான தொடர்பை முறித்துள்ளார். முதலில் கனவுகளில் பாம்புகள் வரத்தொடங்கியதே தன்னுடைய இந்த பயணத்துக்கும் மாற்றத்துக்கும் காரணம் என்று கூறியுள்ளார். ”நான் உண்மையான மற்றும் நிஜத்தில் வாழும் ’மனித ஜந்து’, அதாவது ’பாதி மனிதன், பாதி மிருகம்’ என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

image

மெடூசாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கின்றனர். அவரது பக்கத்தில் 1990 -2016 வரையிலான அவர் கடந்துவந்த பாதையை பகிர்ந்துள்ளார். மேலும் முன்பு / பின்பு புகைப்படங்களையும் போஸ்ட் செய்துள்ளார். அதிலிருந்து அவருடைய ஒவ்வொரு கட்ட மாற்றங்களும் அடையாளங்களும், அவர் மேற்கொண்ட அறுவைசிகிச்சைகளும் தெரியவருகிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor