பெண்கள் ஐ.பி.எல்., தொடருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமத்தை ரூ. 951 கோடிக்கு ‘வயாகாம் 18’ நிறுவனம் தட்டிச் சென்றது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடரின் முதல் சீசன் வரும் மார்ச்சில் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து அணிகள், 25 நாட்களில், 22 போட்டிகளில் பங்கேற்க உள்ளன. போட்டிகள் அனைத்தும் மும்பையில் நடத்தப்படும். அணிகளின் விபரம் வரும் ஜன. 25ல் அறிவிக்கப்பட உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.