Loading

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார் என்பது தொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியுடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கெனவே விவாதித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பா.பென்ஜமின் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

வெற்றி வியூகம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தமாகா அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்தித்து, தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியை 2 நாட்களுக்கு முன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அதுகுறித்தும், அரசியல் சூழல்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்.

தேர்தல் அறிவிப்பு வந்த உடனே அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவரும் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இன்று அதிமுக மூத்த தலைவர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதிமுக, தமாகா, பாஜக கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது. வேட்பாளர் தொடர்பாக கலந்துபேசி ஓரிரு நாட்களில் அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றிபெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கருத்து

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்றிரவு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘‘ஈரோடு கிழக்குதொகுதிக்கு தேர்தல் தேதியைஅறிவித்தவுடன், பாஜகவில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களது கருத்துகளை பாஜக மூத்த தலைவர்களிடம் எடுத்து கூறியிருக்கிறேன். அவர்கள் இது தொடர்பான தகவலை தெரிவித்த பிறகு, பாஜகவின் தேர்தல் நிலைப்பாட்டை கூறுகிறேன்’’ என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *