வேலூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருதுவிடும் திருவிழாக்கு தடை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; வேலுர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நிபந்தனைகளை விழாக்குழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. மேலும் அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படுவது தெரியவருகிறது. எனவே அரசின் விதிகளின்படி இரட்டை தடுப்பான்கள் அமைத்திருக்க வேண்டும்.

Rahul Dravid’s son: புலிக்கு பிறந்தது பூனையாகிடுமா? டிராவிட்டின் மகனுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு!

 

news reels

மாடுகள் ஓடும் இடத்தில் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்ட 25 தன்னார்வ தொண்டர்களுக்கு அதிகமாகவும், எராளமான பொதுமக்களும், காளை உரிமையாளர்களும் கூடி மாடுகள் எளிதாக ஓடுவதற்கு தடையாக உள்ளனர். விழா ஆரம்பம் மற்றும் முடிக்கும் நேரங்கள் நிபந்தனைகளில் உள்ளவாறு கடைபிடிக்கப்படுவது இல்லை. வருவாய் மற்றும் காவல்துறையினர் கூறிய அறிவுரைகளை விழாக்குழுவினர் கடைபிடிக்கப்படுவதில்லை. விழாக்குழுவினர் அதை கண்டுகொள்ளுவதும் இல்லை. அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் எதிர்பாராத விதமாக புகுந்து பொதுமக்களுக்கு காயத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது. கோவிந்தரெட்டிபாளையத்தில் ஒரு சுற்றுக்கு மேல் காளையை ஓடவிட்டதால் அந்த காளை இறந்து விட்டதாக விசாரணையில் தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை அனுப்பும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Annamalai: “தமிழகம் முழுவதும் நடைபயணம்; திருச்செந்தூரில் தொடக்கம்” – பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு 

அரசு வழங்கி உள்ள உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து விழாக்குழுவினர் அந்தந்த கிராமங்களில் மிகவும் பாதுகாப்பான முறையிலும், பொதுமக்கள் மற்றும் எருதுகளுக்கு பாதுகாப்பான முறையிலும் விழாக்கள் நடத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட விழாக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் எருதுவிடும் விழாவுக்கு தடைவிதிக்கப்படும் என்று இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Palani Kumbabishekam: கும்பாபிஷேக விழா – பழனியில் பக்தர்கள் கூட்டம் வருகை அதிகரிப்பு

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: