கோவை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி இருக்கிறது. வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாப் பகுதியாக இது பராமரிக்கப்பட்டுவருகிறது. இந்த அருவிக்குச் செல்வதற்கு, சூழல் சுற்றுலா மேம்பாட்டுக்கென வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவருகிறது.

கோவை குற்றாலம்

அதன்படி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார் நிறுத்த ரூ.50 என வனத்துறையினர் வசூலித்துவருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு போலி ரசீது மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில், இரண்டு இயந்திரங்களில் அச்சடித்து பணம் பெற்றுவந்திருக்கின்றனர்.

கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்

இதில் ஓர் இயந்திரத்தில் பதிவாகும் எண்ணிக்கைக்கான தொகை மட்டும் அரசுக்குச் செல்லும். மற்றோர் இயந்திரத்தில் அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகள் முறைகேடாகப் பணத்தைச் சுருட்டிவந்தது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ராஜேஷ்குமார் இந்த மோசடியை நடத்தியது தெரியவந்திருக்கிறது. ராஜேஷ்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி சீட்டுகளை வழங்கி, பல லட்ச ரூபாய் மோசடி செய்துவந்திருக்கிறார். இதையடுத்து ராஜேஷ்குமாரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.

ராஜேஷ்குமார்

மேலும், அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் போளுவாம்பட்டி முன்னாள் வனச்சரகர் சரவணன் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *