பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர் மைனா வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைய, 6 வது சீசனும் நாளையுடன் (22 ஜனவரி 2023) முடியவுள்ளது. இந்த ஆறாவது சீசனின் ஒரே வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளரான மைனா நந்தினி பிக்பாஸ் போட்டியை விட்டு, வெளியேறினார்.

நந்தினி மைனாவாக மாறிய கதை

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த இவர், கலக்க போவது யாரு என்ற புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் பின், வம்சம் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். படங்களில் நடித்து கிடைக்காத புகழ், இவருக்கு சீரியல் மூலம் கிடைத்தது. சரவணன் மீனாட்சி 2 நாடகத்தில் மைனா ரேவதியாக நடித்த இவரை, பலரும் நந்தினி என்று அழைப்பதற்கு பதில் மைனா என்றே அழைத்து வருகின்றனர். தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். தற்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கினார்.

news reels

மைனா வெளியேற்றப்பட்ட முறை 

ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ட்விஸ்ட் தரும் விதமாக முதல் மிட் நைட் எவிக்‌ஷன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெரிய திரைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த லிஃப்டில் ஒவ்வொருவராக ஏற வேண்டும். லிஃப்ட் மேலே கீழே சென்று வரும் இறுதியாக மேலே வருபவர் இறுதிப்போட்டிக்கும், லிஃப்டில் மேலே வராதவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

வேறுபட்ட பிக்பாஸ் சீசன் 6 

எப்போதும், க்ராண்ட் ஃபினாலே அன்று 5 நபர்கள் உள்ளே இருப்பார்கள். ஆனால், இம்முறை மைனாவும் அமுதவாணனும் வெளியேற, அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே உள்ளனர். இம்முறை இரண்டு பணப்பெட்டி டாஸ்க், மிட் நைட் எவிக்‌ஷன், ஒரே ஒரு வைல்ட் எண்ட்ரி போட்டியாளர் என அனைத்தும் புதிதாக நடத்தப்பட்டுள்ளது. அஸிம்தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்ற தகவல் பரவிவருகிறது. விக்ரமனின் ரசிகர்கள் இதை மறுத்து வரும் நிலையில், இருவருக்கும் முதல் பரிசு கொடுப்பார்கள் என சாத்தியமற்ற விஷயங்களை சிலர் கூறிவருகின்றனர். 

மைனா பெற்ற சம்பளம் 


பிக்பாஸ் மைனா நந்தினிக்கு ரூபாய் 25,000 ஒரு நாள் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த இவர்,  103 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். 25,75,000 ரூபாயை பெற்று இவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ரூ.11.75 லட்சத்துடன் வெளியேறிய அமுதவாணன்.. பிக்பாஸில் வாங்கிய மொத்த சம்பளம் இத்தனை லட்சமா?

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor