Loading

India

oi-Arsath Kan

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி திட்டம் விரிவாக கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்தி பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில் இதில் ஆர்வம் காட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி.

What is Mission Sakthi? Udhayanidhi stalin heard about the Womens Livelihood Development Program with interest!

இது தொடர்பான விவரம் வருமாறு;

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

What is Mission Sakthi? Udhayanidhi stalin heard about the Womens Livelihood Development Program with interest!

குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

What is Mission Sakthi? Udhayanidhi stalin heard about the Womens Livelihood Development Program with interest!

மேலும் ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி (Mission Sakthi) என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் கலந்தாலோசித்தார்.

மேலும் மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இனைந்து செயல்படுகின்றன என்பதினை ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா, இ.ஆ.ப. விளக்கமளித்தார்.

What is Mission Sakthi? Udhayanidhi stalin heard about the Womens Livelihood Development Program with interest!

அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

English summary

What is ‘Mission Sakthi’? Udhayanidhi stalin heard about the Women’s Livelihood Development Program with interest! Minister Udhayanidhi Stalin, who has visited Odisha, has heard in detail about the Mission Shakti project implemented to improve the livelihood of women in the state.

Story first published: Friday, January 20, 2023, 15:47 [IST]

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *