இன்றைய நிலையில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களுள் ஒருவரும், உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர்களின் வரிசையில் முக்கியமானவர் எலான் மஸ்க் ஆவார். அவரின் சாதுரியமான அணுகுமுறையும், தொழிலை கையாளும் விதமும், அவரின் தொலைநோக்கு பார்வையும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது வரை பல்வேறு வித விமர்சனங்களை பெற்றாலும், அவை அனைத்தையும் தவிர்த்து சாதித்து இருக்கிறார். மேலும் அவ்வபோது சில அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.

இதன் காரணமாகவே எலான் மஸ்க்கிற்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. முக்கியமாக சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். பலரும் அவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தான் கொண்ட கருத்தில் விடாப்பிடியாக நின்று தற்போது வரை அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த ஏலான் மஸ்க் அவரது பட்டியலில் புதிய வித்தியாசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அதாவது மிக அதிக அளவிலான சொத்துக்களை இழந்த பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் எலான் மஸ்க். ஃபோப்ஸ் பத்திரிகையின் அறிக்கையின் படி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 182 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை மஸ்க் இழந்துள்ளார்.

Also Read : DAVOS 2023 | தொடங்கியது உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச கூட்டம்!

அவர் 200 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஜப்பானில் சேர்ந்த டெக் முதலீட்டாளரான மாஷாயோஷி சன் என்பவர் தான் தன்னுடைய சொத்து மதிப்பில் 58.6 பில்லியன் டாலர்களை இழந்து முதலிடத்தில் இருந்தார். தற்போது எலான் மஸ்க் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலமாகவும், ட்விட்டரை வாங்குவதற்கு தவறு செய்த முயற்சிகளினாலும் அவர் மிக அதிக அளவில் சொத்துக்களை இழந்துள்ளார். மேலும் 200 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை இழந்தாலும் இன்னமும் கூட உலக பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறார். மேலும் இவருடைய டெஸ்லா நிறுவனம் தான் உலக அரங்கில் ஆட்டோமொபைல் விற்பனையில் மிகவும் மதிப்புடைய நிறுவனமாக இருந்து வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor