25 ஆண்டுகளுக்கு முன்பு மார்க் ராண்டால்ஃப் என்பவருடன் இணைந்து ரீட் ஹேஸ்டிங்ஸ் நிறுவிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து ரீட் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஸ்ட்ரீமிங் ஜாம்பவானாக விளங்கும் நிர்வனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 1997 ஆம் ஆண்டு மெயில் வழியாக படங்களை வாடகைக்கு கொடுக்கும் சேவையாக அறிமுகமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இன்று உலக அளவில் பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமாக மாறியுள்ளது. சென்ற ஆண்டின் இறுதியில் சுமார் 230 மில்லியன் சந்தாதாரர்களை கையில் வைத்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஹேஸ்டிங்ஸ் , “என்னுடைய தலைமை அதிகாரத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் சரியான நேரம் இது. என் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து நான் விளக்குகிறேன்” என்று  அறிவித்துள்ளார்.  முன்னதாக தனது நிர்வாக பொறுப்புகளை  அதிகளவில் மற்றவர்களுக்கு ஒப்படைத்து வருவதாக ஒரு வலைப்பதிவு இடுகையில் எழுதினார்.

தனது வலைப்பதிவில் “எங்கள் குழு பல ஆண்டுகளாக வாரிசு திட்டமிடல் பற்றி விவாதித்து வருகிறது. எங்கள் முதல் 25 ஆண்டுகளைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அடுத்த கால் நூற்றாண்டு பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என்று  ஹேஸ்டிங்ஸ் எழுதினார்

தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ், டெட் சரண்டோஸுடன் இணை-தலைமை நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் நெட்ஃபிளிக்ஸின் பாரிய முதலீட்டு காலத்தில் நிரலாக்கத்திற்கு பொறுப்பாக இருந்தார். மேலும் டெட் சரண்டோஸ் 2020 இல் ரீல் ஹேஸ்டிங்ஸுடன் இணை-தலைமை நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றார்.

நெட்ஃபிளிக்ஸ் கடந்த ஆண்டு ஏப்ரலில் அதன் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. இதனால், அதன் தசாப்த கால வளர்ச்சி முடிவுக்கு வந்ததாக பேச்சு எழுந்தது. ஆனால் ஆண்டின்  இறுதியில் வெட்னெஸ்டே, ஹாரி & மேகன் போன்ற நிகழ்ச்சிகளை வைத்து தனது சந்தாதாரர்கள் எண்ணிக்கையை உச்சிக்கு கொண்டுபோனது.

இந்த ஆண்டின் தொடக்கமும் சிறப்பாக அமைத்திருக்கும் நிலையில் ரீல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும் சரண்டோஸ் மற்றும் பீட்டர்ஸ் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உத்வேகத்துடன் இருப்பதற்கும், பொழுதுபோக்குத் துறையில் நெட்ஃபிளிக்ஸை சிறந்த முறையில்  வழிநடத்துவதற்கும் உதவுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரின் கடந்தகால உதாரணங்களைப் பின்பற்றி, ஹேஸ்டிங்ஸ் நிர்வாகத் தலைவராக நீடிப்பார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor