Loading

India vs New Zealand 1st ODI: புதன்கிழமையன்று நியூசிலாந்திற்கு எதிராக ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.  மேலும்,  கேப்டன் ரோஹித் சர்மாவிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிராஜ் தனது பந்துவீச்சு மூலம் பலராலும் மிகவும் ஈர்க்கப்பட்டார்.  ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் சிராஜ், இலங்கைக்கு எதிரான இந்தியாவின் சொந்த ODI தொடரை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ், தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் மற்றும் 10.22 சராசரியை கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்த இஷான்! ரோகித், சச்சின் எலைட் லிஸ்டில் இடம்

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்திலும் சிராஜ் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.  இந்நிலையில், சிராஜ் கவனிக்கப்பட வேண்டும் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றில் அவர் அணிக்கு முக்கியமானவராக இருப்பார் என்றும் கேப்டன் ரோஹித் குறிப்பிட்டார்.  “அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். கடந்த இரண்டு வருடங்களில் அவர் தனது லைன் மற்றும் லென்த்தை மிகவும் மேம்படுத்தியுள்ளார். புதிய பந்தில் அவர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்துகிறார்.  

“அவர் இப்போது அவரது பந்துவீச்சை நன்றாகப் புரிந்துகொள்கிறார், இது என் பார்வையில் பெரிய விஷயம். அவரிடமிருந்து அணி என்ன விரும்புகிறது என்பதும் அவருக்குத் தெரியும். மொத்தத்தில், அவர் எங்களுக்கு ஒரு சிறந்த பந்துவீச்சாளராகிவிட்டார். அவரால் எல்லா கட்டங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவரைப் போன்ற பந்துவீச்சாளர்கள் எங்களுக்குத் தேவை, அவரை நிர்வகித்து, உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்,” என்று கேப்டன் ரோஹித் கூறினார்.  இந்திய அணி பும்ராவை நம்பி முக்கிய தொடரில் களமிறங்கிய நிலையில், தற்போது அவரது தேவை அணிக்கு இல்லாமல் இருந்து வருகிறது.  

மேலும் படிக்க | கேஎல் ராகுலுக்கு திருமணம்! எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *