விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில், சமீப காலமாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும்  பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், அவர்களின் உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்களால், தீடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க- என்றும் என் நினைவில் அம்மா – நடிகர் வடிவேலு

19.01.2023 அன்று போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் தீடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது,  விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட சாலையோர பிற உணவகங்களும் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் கண்டறியப்பட்டால், அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *