Loading

International

oi-Jackson Singh

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய எல்லையை ஒட்டி குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் திடீரென உரையாற்றினார்.

அப்போது அவர், போருக்கு தயாராக இருக்குமாறும், எந்தவித தாக்குதலையும் எதிர்கொண்டு திருப்பித் தாக்க படைகளை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் அத்துமீறி நுழைந்து, இந்திய ராணுவத்தினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீன ராணுவத்தனர் பின்வாங்கிய நிலையில் அவர்களிடம் முதன்முறையாக அந்நாட்டு அதிபர் உரையாற்றியுள்ளார்.

பின்னுக்கு சென்ற வாரிசு, துணிவு! 1.4 லட்சம் ட்வீட்களுடன் #GetOutRavi ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பின்னுக்கு சென்ற வாரிசு, துணிவு! 1.4 லட்சம் ட்வீட்களுடன் #GetOutRavi ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம்

அருணாச்சல் மீது 'கண்' வைக்கும் சீனா

அருணாச்சல் மீது ‘கண்’ வைக்கும் சீனா

இமயமலையை ஒட்டியுள்ள லடாக் பகுதிக்குள் கடந்த 2020-ம் ஆண்டு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவத்தினர் அடித்து விரட்டினர். இந்திய ராணுவ வீரர்களின் அசுரத்தனமான தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சீனப் படையினர் புறமுதுகிட்டு ஓடினர். அதன் பின்னர் லடாக்கில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத் துருப்புகளை குவித்திருந்தன. இந்த சூழலில், கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 17,000 அடி உயரத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவத்தினர் சுமார் 200 பேர் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் 50 பேர் சேர்ந்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அவமானமாக கருதும் சீனா

அவமானமாக கருதும் சீனா

லடாக்கிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் சீனப் படையினர் இந்திய ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகின. இதனை உலக அரங்கில் தனக்கு நேர்ந்த அவமானமாக சீனா கருதுகிறது. மேலும், எப்படியாவது இந்த அவமானத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அந்நாடு நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, அருணாச்சல் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும், பீரங்கி, போர் விமானங்கள் ஆகியவற்றையும் அந்நாடு நிலைநிறுத்தியுள்ளது.

திடீர் உரை நிகழ்த்திய அதிபர்

திடீர் உரை நிகழ்த்திய அதிபர்

இந்தியாவும் பதிலுக்கு அருணாச்சல பிரதேச எல்லையில் வரலாறு காணாத படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய எல்லையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சீனப் படையினர் மத்தியில் இன்று உரை நிகழ்த்தினார். பெய்ஜிங்கில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அவர் பேசினார். அவர் கூறியதாவது: கடுங்குளிரையும், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக பாடுபட்டு வரும் உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

“போருக்கு தயாராக இருங்கள்”

சீனாவுக்கு தற்போது சவாலான காலம் நிலவி வருகிறது. அதனால் அனைத்துக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, போருக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் எவ்வித தாக்குதலையும் சமாளித்து திருப்பித் தாக்கும் தயார்நிலையில் ராணுவம் இருக்க வேண்டும். இந்திய எல்லைப்பகுதியில் சமீபகாலமாக என்ன சூழல் நிலவி வருகிறது; அது சீனா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.

English summary

Chinese President Xi Jinping made a sudden speech today among the Chinese soldiers who are stationed along the Indian border. He then ordered to be ready for battle and to keep the troops ready to counter attack against any attack.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *