நடிகர் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தூத்துக்குடியில் இரண்டு திரையரங்குகளில் ’துணிவு’ திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரபாகு. ஆட்டோ டிரைவரான இவர், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் எனச் சொல்லப்படுகிறது. இவர், தன் குடும்பத்தினருடன் தூத்துக்குடி போல்டன்புரத்திலுள்ள திரையரங்கில் துணிவு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக, தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.

வீரபாகு, மது அருந்தியிருந்ததால் தியேட்டர் ஊழியர்கள் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டனராம். இதனால், தன் குடும்பத்தினரை மட்டும் தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாராம் வீரபாகு. இந்த நிலையில், திரைப்படம் முடிந்து வீட்டுக்குச் சென்ற வீரபாகுவின் மனைவி, குழந்தைகள் வீட்டின் கதவை தட்டியிருக்கின்றனர்.