ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–5’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் என்சோ குவாக்காட் மோதினர். முதல் செட்டை 6–1 என மிகச் சுலபமாக கைப்பற்றிய ஜோகோவிச், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 6–7 என போராடி இழந்தார். பின் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–2 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச் 4வது செட்டை 6–0 என வென்றார்.