புண்ணிய தலங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக ராமேஸ்வரம் ராமநாதசாமி ஆலயம் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாள்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாள்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அமாவாசை அன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த நிலையில் தை அமாவாசை தினமான நாளை (ஜனவரி 21) சனிக்கிழமை ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடவும், கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோயிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சந்நிதி பிராகாரத்தில் இருந்து 3-ம் பிராகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம்

தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் எளிதாகப் புனித நீராடச் செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்புக் கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.

பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.

தை அமாவாைசயையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும் எனக் கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்திற்கு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வந்து செல்வார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு, நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது‌.

ராமேஸ்வரம் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமிநகர், சல்லிமலை, இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, சௌந்தரியம்மன் கோயில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி பார்க்கிங், ஜே.ஜே‌.பார்க்கிங் மற்றும் கோயில் பார்க்கிங் செல்ல வேண்டும்.

அதேபோல் பார்க்கிங் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேற்குவாசல் வழியாகத் திட்டக்குடி வந்தடைந்து, கோயில் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாகச் செல்ல வேண்டும்.

அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடம் பக்தர்கள் (பழைய படம்)

தனுஷ்கோடி நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேற்குவாசல் வழியாகத் திட்டக்குடி வந்தடைந்து, தேவர் சிலை, ரயில்வே பீடர் ரோடு வழியாகச் செல்ல வேண்டும். தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, ரயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாகச் செல்ல வேண்டும்.

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்வரை சாலையோரப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும், பாம்பன் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணிக்காக ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பரின்டெண்டன்ட் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor