மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள நார்வே வீரர் காஸ்பர் ரூட் 2-வது சுற்றுடன் வெளியேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வதுசுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடமும், போட்டித் தரவரிசையில் 2-வது இடமும் வகித்த நார்வேயின் காஸ்பர் ரூட், 48-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை எதிர்த்து விளையாடினார்.

3 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காஸ்பர் ரூடை 6-3, 7-5, 6-7 (4-7), 6-2 என்றசெட் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீழ்த்தினார் ஜென்சன் புரூக்ஸ்பி. நேற்று முன்தினம் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 2-வது சுற்றுடன் வெளியேறிய நிலையில் தற்போது 3-ம் நிலை வீரரான காஸ்பர் ரூடும் நடையை கட்டி உள்ளார்.

8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-4), 6-7 (2-7), 4-6, 7-6 (8-6), 2-6 என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் 2 நிமிடங்கள் போராடி தகுதி நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் வீழ்ந்தார். இதேபோன்று 12-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், 23-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

முன்னணி வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறி வரும் நிலையில் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது திரும்பி உள்ளது. ஜோகோவிச் தனது 2-வது சுற்றில் தகுதி நிலை வீரரான பிரான்ஸின் என்ஸோ குவாக்காடை 6-1, 6-7 (5-7), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 6-4, 6-7 (2-7), 6-3 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் எமில் ருசுவூரியையும், 9-ம் நிலைவீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 7-5, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மாக்சிம்கிரெஸ்ஸியையும், 27-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் மிடிட்ரோவ் 6-3, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் செர்பியாவின் லாஸ்லோ டிஜெரேவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா, 53-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார். இதில் சபலெங்கா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டஸையும், 30-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-0, 7-5 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவையும் தோற்கடித்தனர்.

சானியா ஜோடி வெற்றி: மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில்இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அனா டேனிலினா ஜோடியானது அமெரிக்காவின் பெர்னார்டா பெரா, ஹங்கேரியின் டால்மா கல்ஃபி ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Situs Slot Gacor link Slot Gacor Judi Bola Parlay Link Slot Gacor Situs Slot Gacor Situs Slot Gacor Hari Ini Slot Gacor Hari Ini Bocoran Slot Gacor hari ini Situs Slot Gacor