Sushant Singh Rajput was Murdered says Autopsy Staff | சுஷாந்த் சிங்க் கொலை செய்யப்பட்டிருக்கலாம் – வெளியான அதிர்ச்சி தகவல்

Estimated read time 1 min read

பாலிவுட் பிரபலமான சுஷாந்த் சிங் 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார் சுஷாந்த் சிங்கின் பிரேதத்தை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா. சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, அது கொலை என கூறியிருக்கும் அவர், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தினால் சரியாக உடற்கூராய்வு செய்யமுடியவில்லை என தெரிவித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து ஸ்டாராக உயர்ந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவரது உடல் மும்பையில் உள்ள கூபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுஷாந்தின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக உறுதிபடுத்தினர். 

மேலும் படிக்க | அமெரிக்க பனிப்புயலையும் தாண்டி அசூர வசூலை குவிக்கும் அவதார் 2… பத்து நாள்களில் சாதனை!

பின்னர் பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அந்த குழுவில் ஒருவராக இருந்த ரூப்குமார் ஷா என்பவர், இப்போது சுஷாந்த் மரணம் பற்றிய அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கூபர் மருத்துவமனையில் அன்று 5 உடல்கள் இருந்ததாகவும், அதில் ஒன்று விஐபி உடல் என்று கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

” சுஷாந்த் இறந்த அன்று 5 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று விஐபி உடல் என கூறினர். முகத்தை பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் என தெரிந்தது. உடலை பார்த்ததுமே இது கொலை என அறிந்து கொண்டேன். அதற்கேற்ப அவரது கழுத்து மற்றும் உடலில் சில காயங்கள் இருந்தன. இவையெல்லாம் உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிடவில்லை. உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அது குறிப்பிடப்படவில்லை. வேகவேகமாக உடற்கூராய்வு செய்தோம். 

காயங்களை எல்லாம் குறிப்பிடலாம் என தெரிவித்தபோது புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என உயரதிகாரிகள் தெரிவித்தனர். நானும் அப்படியே செய்து பிரேத பரிசோதனை செய்த சுஷாந்தின் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து சுஷாந்த் சிங்  மரணம் தொடர்பான சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | The Teacher : விவாதத்தை கிளப்பும் ‘தி டீச்சர்’… மிரட்டும் அமலா பால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours