` நகைச்சுவைக்கு உடல்மொழி மிகப்பெரிய பலம்! அப்படி தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக மக்களை சிரிக்க வைப்பவர்களில் ஒருவர்தான் நடிகர் சிங்கமுத்து. தனது மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கான விவாதத்தில் இருந்தவரை ஒரு தேநீர் இடைவெளியில் சந்தித்துப் பேசினோம்.
என்னோட பையனை வச்சு ` தேவர் ஹோட்டல்’னு ஒரு படம் எடுத்துட்டு இருக்கோம். அதற்கான வேலைகளில் இருக்கேன் என்றவரிடம் வடிவேலுவிற்கும், அவருக்குமான வழக்கு பற்றிக் கேட்டோம்.
அது வாய்தாவாக போயிட்டே தான் இருக்கு. அவருக்கு ஷூட்டிங் இருந்ததுன்னு அவரால வர முடியல. அப்புறம் என்னால வர முடியலைன்னு தொடர்ந்து இழுத்துட்டே தான் போகுது. ஒரு தடவை நாங்க ரெண்டு பேரும் ஆஜர் ஆனோம். அப்ப நான் வேணும்னே அவர் பக்கத்துல போய் உட்கார்ந்தேன். அப்ப என் முகத்துக்கு நேராவே என் மேலுள்ள குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கலாமே? அவருக்குத் தெரியும் அவர் சொல்றது பொய்னு! என் பையன் ஹீரோவாக வந்ததால வடிவேலுவுக்கு வயித்தெரிச்சல்! அவன் பையனால ஹீரோவாக ஆக முடியல. முடியலைன்னு சொன்னா அவரே கைக்காசைப் போட்டு மகனை நடிக்க வச்சு படம் எடுக்கணும். எடுத்தாலும் அது மக்களுக்குப் பிடிக்கணும்.. ஆனா, அதற்கான முயற்சிகளை அவர் தான் பண்ணனும். அதை விட்டுட்டு மத்தவங்க மேல பொறாமை படக்கூடாது! என்றவரிடம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பார்த்தீங்களா என்றதும் புன்னகைத்தவாறே தொடர்ந்து பேசினார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் நான் பார்க்கலை. ஆனா, அந்தப் படத்தைப் பார்த்தவங்களைப் பார்த்தேன். அவங்க முகத்தைத்தான் பாவம் பார்க்க முடியல. வடிவேலு அந்தப் படம் வரும்போது பழைய கேங் எல்லாம் இல்ல. இந்தப் படத்தோட எல்லா காமெடியனும் ஒழிஞ்சான்னு சொன்னார். படம் வர்றதுக்கு ஒரு மாசம் முன்னாடியே படம் ஓடாதுன்னு சொல்லிட்டேன். காமெடிங்கிறது ஒருத்தர் மட்டும் பண்றதில்லை. பத்து பேர் சேர்ந்து தேர் இழுத்தா தான் ஜெயிக்க முடியும். ஒருத்தர் மட்டுமே பண்ணனும்னு நினைச்சா நிச்சயம் எங்கேயாவது சிக்கல் விழுந்திடும். இடையில் ஒரு தயாரிப்பாளர் என்கிட்ட நீங்களும், வடிவேலுவும் ஒன்னு சேர்ந்து நடிப்பீங்களான்னு கேட்டார். எனக்கு யாருமே எதிரி கிடையாது. மனுஷங்க பொழைக்கிறதுக்காக ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. அது அவங்களுடைய குணம்.
இப்பவே ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி வடிவேலு குறித்து பேசுறாங்க. வடிவேலு சும்மாவே இருந்திருக்கலாம்… புலி வருது! புலி வருது!ன்னு பேசுனாரு… கடைசியா அவரே வீட்டுக்குப் போயிட்டாருன்னு சொன்னாங்க. இனி வடிவேலுவை யாரும் கூப்பிட மாட்டாங்கன்னும் சொன்னாங்க. ஒரு படம் ஓடும், ஒரு படம் ஓடாது… மன்னிச்சி விட்டுருங்கப்பான்னு சொன்னேன். வடிவேலு, `நீ மனசு விட்டுடக் கூடாது! தொடர்ந்து நடி.. உன் படம் தான் ஓடும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு ஏதாவது ஒரு படம் ஓடாதா? அதை வச்சு பட வாய்ப்புகள் வராதான்னு பாரு! இதை ஒரு நண்பனா உன்கிட்ட சொல்றேன். இன்னமும் முயற்சி பண்ணி நடி. உனக்கு நட்புன்னா என்னன்னு கூடத் தெரியாது. நட்பை களங்கப்படுத்த தான் உனக்குத் தெரியும்!’ என்றார்.
இன்னும் அரசியல், சினிமா என பல்வேறு விஷயங்கள் குறித்து சிங்கமுத்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours