Loading

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: கவர்னர்கள் நியமனத்தில் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி. கவர்னர் நியமனத்தில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டும். கர்நாடகாவில் பெல்காம் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநலத்திற்கு தான் சொந்தம்.. அங்கு மராட்டிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

latest tamil news

இதுபோல பல பகுதிகள் கர்நாடகாவில் உள்ளன. அவற்றையும் மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி, ஜோதிபா பூலே ஆகியோரை அவமதிக்கும் வகையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியது சரியல்ல. இந்த விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே அமைதி காக்கிறார்” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *