horse

 

சேலம் மாநகரம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான குதிரை ஏற்றம் போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் குதிரை ஏற்றம் போட்டி தற்போது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. மக்களின் ஆர்வம் குதிரை ஏற்றும் போட்டியில் திரும்பி உள்ள நிலையில் தனியார் அமைப்பினர் சார்பில் குதிரை ஏற்றம் போட்டி மாநில அளவில் நடைபெற்றது.

5 வயது முதல் 72 வயது உள்ள மாணவர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து 12 மாவட்டங்களில் போட்டிகளில் பங்கேற்றனர். குதிரை ஏற்றம் போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. நடந்து செல்லுதல், மெதுவாக நடந்து செல்லுதல், ஓடுதல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 210 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க: 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

கரோனா காலத்திற்கு முன்பு இந்த போட்டிகள் நடைபெற்றது. அதன்பின்பு நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது குதிரை ஏற்றும் போட்டி நடைபெற்றது. மேலும் கடந்த போட்டிகளைக் காட்டிலும் தற்போது போட்டிகளில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் தேசிய அளவில் அடுத்தகட்ட போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குதிரை ஏற்றம் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சந்துரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், குதிரை ஏற்ற போட்டிகளில் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் மற்ற வீட்டு விலங்குகளைப் போல் குதிரையும் நன்கு பழகக்கூடிய ஒன்றும் எனத் தெரிவித்த அவர், தற்போது இந்திய இன குதிரைகள் மட்டும் பங்கேற்றுள்ளதாகவும், அடுத்த கட்டமாக தேசிய அளவில் குதிரை ஏற்றம் போட்டிகள் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *