Loading

International

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

கோலா லம்பூர்: மலேசியாவில் தந்தையுடன் ஆற்றில் படகோட்டிக் கொண்டிருந்த போது, நடந்த பகீர் சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு மலேசியா. தமிழர்களும் கணிசமாக வசிக்கும் இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே சுமார் 3 கோடிதான்.

நிலப்பரப்பிலும் சிறிய நாடாக இருந்தாலும், அங்கு பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளையும் போலவே இங்கேயும் மனித மிருக மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆபாச வீடியோ பதிவேற்றம்..மணப்பாறையில் சிபிஐ சோதனை..சிக்கிய ராஜாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை ஆபாச வீடியோ பதிவேற்றம்..மணப்பாறையில் சிபிஐ சோதனை..சிக்கிய ராஜாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

மலேசியா

மலேசியா

அப்படித்தான் மிக மோசமான ஒரு சம்பவம் இப்போது அங்கு நடந்துள்ளது. அங்கு லாஹாட் டத்து அருகே இருக்கும் ஆற்றில் இளைஞர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அங்குச் சிறு படகில் சென்ற இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு வந்த ராட்சத முதலை அவர்களைத் தாக்கியுள்ளது. மேலும், அந்த குழந்தையைக் கவ்வியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை முதலையிடம் இருந்து தந்து மகனைக் காப்பாற்ற முயன்றனர்.

 முதலை தாக்குதல்

முதலை தாக்குதல்

இருப்பினும், அந்த ராட்சத முதலை தந்தையையும் கடித்துக் குதறிவிட்டது. இதில் அந்த தந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், உடல் முழுக்கவும் கூட பல காயங்கள் ஏற்பட்டன. தந்தையைத் தாக்கிய அந்த முதலை, ஒரு வயதுக் குழந்தையைப் படகில் இருந்து கவ்விச் சென்றது. அந்த குழந்தையை முதலை உயிருடன் விழுங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வெறும் ஒரு சில நொடிகளில் இந்த ஒட்டுமொத்த சம்பவமும் நடந்து முடிந்துவிட்டது.

 குழந்தை பலி

குழந்தை பலி

இந்தச் சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள் தந்தையை மீட்டனர். ஆனால், அதற்குள்ள அந்த முதலை குழந்தையை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது. சில நிமிடங்கள் கழித்து, அந்த முதலை மீண்டும் குழந்தையின் சடலத்துடன் ஆற்றின் மேற்பரப்பிற்கு வந்துள்ளது. குழந்தையின் சடலத்தை வாயில் கவ்வியிருந்த அந்த முதலை, மீண்டும் சடத்துடன் ஆற்றில் மூழ்கிவிட்டது. படுகாயம் அடைந்துள்ள அந்த நபருக்கு 40 வயது இருக்கும் என்றும் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 தந்தை படுகாயம்

தந்தை படுகாயம்

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், காயமடைந்தவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அவர்கள் குழந்தையைத் தேடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மலேசிய போலீசார், தீயணைப்புத் துறையினர் உடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இருப்பினும், முதலை எங்கு உள்ளது என்றே தெரியவில்லை என்பதால், தேடும் பணிகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “இங்கு ஆற்றுக்கு அருகே முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கு ஏகப்பட்ட ராட்சத முதலைகள் உள்ளன. அவை ரொம்பவே எளிதாகக் குழந்தைகளை மட்டுமின்றி மனிதர்களையும் கூட கொன்றுவிடும். எனவே, நீருக்கு அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளோம். இருப்பினும், இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஆற்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களால் ஆற்றுக்குச் செல்ல முடியாமல் இருப்பதில்லை. இதுவே முதலை அட்டாக் நடக்கக் காரணமாக உள்ளது” என்றார்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேநேரம் குழந்தையை ராட்சத முதலை கவ்வி செல்வது இது முதல்முறை இல்லை. கடந்த மாதம் கோஸ்டாரிகாவின் லிமோனில் ஆற்றின் அருகே நின்று கொண்டிருந்த 8 வயதான ஜூலியோ ஓடெரோ பெர்னாண்டஸ் என்ற சிறுவனை முதலை அப்படியே இழுத்துச் சென்றது. அவர்களின் பெற்றோர் கண் முன்னாலேயே சிறுவனை, அந்த முதலை கடித்துக் குதறியது. அந்த குடும்பம் விடுமுறைக்காக மீன்பிடிக்கச் சென்ற போது இந்த சோகம் நடந்தது. இப்போது அதேபோன்ற ஒரு சம்பவம் தான் மலேசியாவில் அரங்கேறியுள்ளது.

English summary

Malaysia crocodile eats one year old boy in front of his father: Malaysia crocodile attack latest news in tamil.

Story first published: Saturday, December 3, 2022, 16:09 [IST]

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *