Loading

பெண் உரிமை, பெண்ணியம் குறித்தான ஓர் உரையாடலை ஒரு கமெர்ஷியல் சினிமாவில் புகுத்தியது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், பிற்போக்கான கதாபாத்திரங்களின் பிற்போக்கான எண்ணங்களுக்குப் பாடம் புகட்டாமல், கணவன் – மனைவி சண்டையை மட்டும் கவனத்தில் கொள்ளும் அந்த க்ளைமாக்ஸ் பலவீனமே! “இங்கு ஒரு பெண் விளையாட்டில் சாதிக்க, முதலில் அவள் குடும்பத்தை வென்றாக வேண்டும்” என்பது போன்ற வசனங்கள் மட்டும் ஆறுதல்.

கேரள நிலப்பகுதி, பொள்ளாச்சி நிலப்பகுதி, குஸ்தி ஆடுகளம் என ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா படத்திற்கு அழகைச் சேர்த்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் மூன்று பாடல்களும் தொந்தரவு இல்லாமல் வந்துபோகிறது என்றாலும், ‘மைக் டைசன்’ பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார். பிரசன்னா ஜி.கே-வின் படத்தொகுப்பு ஆக்‌ஷன் காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி விமர்சனம்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *