கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் அணியை வென்றதல் மூலம் அடுத்த சுற்று போட்டிக்கு தென் கொரியா தகுதி பெற்றது.

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் விறு விறுப்புக்கும் மற்றும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத கத்தார் கால்பந்து தொடரில் நேற்று மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்றன. இதில், இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், H பிரிவில் இடம்பெற்றுள்ள தென் கொரியா பலம்வாய்ந்த போர்ச்சுகல் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஹார்டா ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார்.

image

அதேபோல் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் ஒருகோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதையடுத்து முதல்பாதி ஆட்டம் 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 90+1வது கூடுதல் நேர ஆட்டத்தில் தென்கொரிய வீரர் ஹவாங் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற தென் கொரிய அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது.

மற்றொரு போட்டியில்,  கானா உருகுவே அணிகள் களம்கண்டன. இதில் முதல்பாதி ஆட்டத்தின் 26 மற்றும் 32வது நிமிடங்களில் உருகுவே வீரர் டி அராஸ்சீட்டா இரண்டு கோல்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இருந்த பேதிலும் இரு அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியது.

image

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் செர்பியா சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில், முதல்பாதி ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஷாகிரி ஒரு கோலும், 44வது நிமிடத்தில் எம்போலோ ஒரு கோலும் அடித்து தங்கள் அணியை முன்னிலை படுத்தினர், அதேபோல் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் செர்பிய வீரர் மைட்ரோவிக் ஒரு கோலும், 35வது நிமிடத்தில் விலாஹோவிக் ஒரு கோலும் அடித்து முதல்பாதி ஆட்டத்தை சமன் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஃப்ரீலர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் சுவிட்சர்லாந்து அணி 3:2 என்ற கோல் கணக்கில் செர்பரியா அணியை வென்றது. இதையடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

image

மற்றொரு போட்டியில் பிரேசில் அணி கேமரூன் அணியுடன் மோதியது. இதில், பிரேசில் அணி மிகவும் எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் தங்களது அணிக்காக கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தின் 90+2வது கூடுதல் நேரத்தில் கேமரூன் வீரர் அபூப்பக்கர் ஒருகோல் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்ததோடு பிரேசில் ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்தார். ஆனால், ஆட்டத்தில் 90+3வது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று களத்தில் இருந்து வெளியேறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *