Loading

ராவல்பிண்டி: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பவுலர்கள் சொதப்பினர். முதல் நாளில் 506 ரன் குவித்த இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உடல் நலக்குறைவில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் தேறியதால் முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் திட்டமிட்டபடி துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பாகிஸ்தான் பவுலர்களை பதம் பார்த்த இவர்கள் பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது டக்கெட் (107 ரன், 15 பவுண்டரி) அவுட்டானார். அபாரமாக ஆடிய கிராலே 122 ரன் (21 பவுண்டரி) விளாசினார். ஜோ ரூட் (23) நிலைக்கவில்லை.

 

பின் இணைந்த போப், ஹாரி புரூக் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபாரமாக ஆடிய போப், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 176 ரன் சேர்த்த போது முகமது அலி பந்தில் போப் (108 ரன், 14 பவுண்டரி) அவுட்டானார். அபாரமாக ஆடிய புரூக், தன்பங்கிற்கு சதம் அடித்தார்.

 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 506 ரன் குவித்திருந்தது. புரூக் (101 ரன், 2 சிக்சர், 14 பவுண்டரி), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (34 ரன், ஒரு சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜாஹித் மஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

13.4 ஓவரில் 100 ரன்

ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி 13.4 ஓவரில் 100 ரன்னை கடந்தது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகவேக சதம் அடித்த இங்கிலாந்து துவக்க ஜோடியானது.

 

506 ரன் குவிப்பு

டெஸ்ட் அரங்கில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் அதிக ரன் எடுத்த அணியானது இங்கிலாந்து (506). இதற்கு முன், 1910ல் சிட்னியில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 494 ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர, அதிகவேகமாக 500 ரன்னை எட்டிய அணியானது இங்கிலாந்து.

* டெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ரன் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. 1936ல் மான்செஸ்டரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் 2ம் நாளில் இங்கிலாந்து அணி 588 ரன் குவித்திருந்தது.

 

ஆறு பந்தில் 6 பவுண்டரி

பாகிஸ்தான் ‘சுழல்’ வீரர் சவுத் ஷகீல் வீசிய 68வது ஓவரில் இங்கிலாந்தின் புரூக், தொடர்ச்சியாக 6 பவுண்டரி விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரே ஓவரில் 6 பவுண்டரி அடித்த 5வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் சந்தீப் பாட்டீல், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், ராம்நரேஷ் சர்வான், இலங்கையின் சனத் ஜெயசூர்யா இப்படி சாதித்திருந்தனர்.

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *