Loading

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இதையும் படிங்க: நியூசிலாந்தில் விளையாடிய மழை.. தொடரை இழந்த இந்தியா

இதேபோல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது ஜீவன்ஜோத் சிங், முகமது அலி, சுமா சித்தார்த், சுஜித் மான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *