Loading

Order to collect Aadhaar of other state workers

கோப்புப் படம்

 

தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கட்டிட வேலை, பானிபூரி கடைகள், துணிக்கடைகள் என பல இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வேலை செய்கின்றனர். குறைவான சம்பளத்தில் அதிக நேரம் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்வதால் பல இடங்களில் அவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். 

படிக்கசெல்போனிலேயே இனி ட்ரூ காலர்! பயனர்களின் கருத்துக்களைக் கேட்கும் டிராய்!

இந்நிலையில் தமிழகத்தில் எதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் வெளி மாநில தொழிலாளர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

அதனால் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவலை சேகரிக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் பற்றி நிறுவனங்கள் காவல்துறையினருக்கு தகவல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

வாடகைக்கு வீடு எடுக்கும் பிற மாநிலத்தவர் அல்லது மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

வெளி மாநிலத்தவர்களால் குற்றச் சம்பவங்கள்:

பல்வேறு காரணங்களை வைத்து சென்னைக்கு வரும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து அரங்கேறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 424 வெளி மாநில நபர்கள் மற்றும் 96 வெளிநாட்டவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் 396 வெளி மாநிலத்தவர்கள் மற்றும் 82 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *