Loading

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம்’ என்று இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது.

image

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

image

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது. 1990ம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. 

இந்து – இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்தப் படத்தை பார்த்த பிரதமர் மோடி, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து பாராட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில்தான் கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் நடாவ் லாபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தவற விடாதீர்: ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகுதான்’ -ராம்தேவின் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *