Loading

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர்.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள்.

கரூர் தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர்.த.பிரபுசங்கர்  துவக்கி வைத்தார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் -. இன்றைய தினம் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 58 மேல்நிலைப்பள்ளிகள் 56 உயர்நிலைப்பள்ளிகள் 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில் வானவில் மன்றம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் சுமார் 25,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு முதல்கட்டமாக கருர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ.334,800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News Reels

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு “வானவில் மன்றம் “தொடங்கப்பட்டுள்ளது. வானவில் மன்றம் செயல்பாடுகள் கேள்வி கேட்பது” மற்றும்” ஆராய்வதன் மூலம்” மாணவர்கள் திறம்பட கற்கவும் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணிதக் கற்றலை மிகவும் எளிமையாகவும் திறமையாகவும் நிகழ்வுகளை அமைக்கவும் ஆசிரியர்கள் வழிமுறைகளை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர்.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.

வானவில் மன்றம் துவங்கப்பட்டதன் அடையாளமாக மாணவிகளால் வண்ண பலூன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பறக்க விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சில எளிய பரிசோதனைகளைச் செய்து காண்பித்தனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி மாணவியர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வைளயிட்டார்கள்.

இவ்விழாவில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ந.கீதா. மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை ) திரு. பெ.கண்ணிச்சாமி. மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கநிலை) திரு. இரா.மணிவண்னன். உதவித்திட்ட அலுவலர் திரு.ப சக்திவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வெள்ளியனை ஊராட்சி மன்றத்தலைவர் திரு சுப்பிரமணி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை. திருமதி கலையரசி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப்பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


குளித்தலை கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது

தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை வகித்தார். இந்த மன்றம் மூலம் மாணவ மாணவியருக்கு அறிவியல் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் வழிகாட்டப்பட உள்ளது. 

இந்நிகழ்ச்சியில் கணித ஆசிரியர் விஸ்வநாதன் அறிவியல் ஆசிரியர் பாலு ஆசிரியைகள் புஷ்பா, கிருத்திகா கலைச்செல்வி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சரோஜா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போல் முட்டகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி தலைமை வகித்தார் தலைமை ஆசிரியை தமிழரசி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வானவில் மன்ற தொடக்க விழாவுக்கு டவுன் பஞ்சாயத் தலைவர் செய்து மணி தலைமை வகித்தார் தலைமை ஆசிரியர் வைர மூர்த்தி ஆசிரியர்கள் ப்ளூரா கலையரசி புவனேஸ்வரி மணிகண்டன் குழந்தைவேல் வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் உமா கவுன்சிலர் இளங்கோ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *