தமிழகத்தில் இருக்கும் முக்கிய கல்லூரிகளில் பச்சையப்பன் கல்லூரியும் ஒன்று. மேலும் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நகரங்களில் ஆறு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு பல ஆண்டுகளாகக் கல்லூரி நிர்வாகத்திற்கும் ஆசிரியர் தரப்புக்குமான பிரச்னை முடிவுக்கு வராமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதாவது இந்த கல்லூரிகளில் 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகுகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருக்கிறதாகக் கூறி, அவர்களின் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டிருந்தது.

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரி

இந்த உத்தரவிற்கு எதிராக உதவி பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணையின் போது மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது நீதிக்கு எதிரானது. நாங்கள் போதுமான தகுதியைப் பெறவில்லை என்று கூறுவது தவறு. பல்கலையும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டிருக்கிறது” என வாதிட்டனர்.

அப்போது அறக்கட்டளையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிமன்றம் உத்தரவிட்டதால் உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார். பிறகு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஓய்வு பெற்ற நீதிபதி நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் மட்டுமே தவறு நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

எனவே உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தது உறுதியாகாத நிலையில் 254 உதவி பேராசிரியர்களின் நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல. வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล