அந்தச் சோதனையில், உடற்பயிற்சி சோதனைகள் செய்வதுபோல இருவரும் நடித்திருக்கிறார்கள். மேலும், அதில் மனோஜ் குமார் தேர்வாகிவிட்டதாகவும், அவருக்குப் பணி நியமன ஆணை, அடையாள அட்டை, ராணுவ உடை, துப்பாக்கி எனச் சகலமும் வழங்கி, பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள ராணுவ முகாம் பகுதிக்கு அருகில் ராணுவப் பாதுகாவலராக நிற்கவைத்திருக்கிறார்கள். மேலும், அவருக்கு கடந்த நான்கு மாதங்களாக ரூ.12,500 சம்பளமும் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக ராகுல் சிங் ராணுவத்திலிருந்து விலகினார். இதற்கிடையில், மனோஜ் குமாருக்கு முகாமில் இருக்கும் உண்மையான ராணுவ வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகே மனோஜ் குமாரின் அடையாள அட்டை முதல் அனைத்து ஆவணங்களும் போலி எனத் தெரியவந்திருக்கிறது. உடனே, ராணுவ வீரர்கள் மனோஜ் குமார் தொடர்பான தகவலை உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரித்ததில், அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.

அதன் பிறகு மனோஜ் குமார் மீண்டும் உத்தரப்பிரதேசத்துக்கே அனுப்பப்பட்டார். ராகுல் சிங், பிட்டு உள்ளிட்டவர்கள்மீது வழக்கு மோசடி வழக்கு பதியப்பட்டு, பிட்டு, அவர்களுக்கு உதவியாக இருந்த ராஜா சிங் ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறது. முக்கியக் குற்றவாளியான ராகுல் சிங் தலைமறைவாகியிருக்கிறார். காவல்துறை அவரையும் தேடிவருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล