இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஹாமில்டன் (நவ. 27), கிறைஸ்ட்சர்ச்சில் (நவ. 30) நடக்கவுள்ளன.