தனது 37 வயது காதலனை காண 5000 கி.மீ பறந்துசென்ற 51 வயது பெண், காதலனால் கொலை செய்யப்பட்டு, உறுப்புகள் திருடப்பட்ட சம்பவம் பெருவில் அரங்கேறியுள்ளது.

மெக்சிகனைச் சேர்ந்தவர் ப்ளான்சா அரெல்லனோ(51). இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் சந்தித்த பெரு நாட்டைச் சேர்ந்த ஜுவான் பப்லோ ஜீசஸ் வில்லஃபெர்டே(37) என்ற நபரை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். ஒருவழியாக தனது காதலனை நேரில் சந்திக்க திட்டமிட்ட ப்ளான்சா, அதன்படி ஜூலை மாதம தனது பயணத்தை திட்டமிட்ட ப்ளான்சா, 5000 கி.மீ தாண்டி லிமாவிலுள்ள தனது காதலனிடம் சென்றிருக்கிறார்.

நவம்பர் 7ஆம் தேதி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ப்ளான்சாவின் சகோதரர் மகளான கர்லா அரெல்லனோவிடம், தான் தனது காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ப்ளான்சா. அதன்பிறகு ப்ளான்சாவிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இரண்டு வாரங்களாக தனது அத்தையைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாததால் சோகமடைந்த கர்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அத்தை ப்ளான்சா பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “நான் இந்த நிலைக்கு தள்ளப்படுவேன் என ஒருநாளும் நினைக்கவில்லை. எனது வாழ்க்கையில் அன்பான மற்றும் முக்கியமான ஒரு நபரை கண்டறிய உதவியை நாடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

image

மேலும் ”எனது அத்தை ப்ளான்சா ஒலிவியா அரெல்லானோ திங்கட்கிழமை நவம்பர் 7ஆம் தேதி பெருவில் காணாமல் போய்விட்டார். அவர் மெக்சிகனைச் சேர்ந்தவர். நாங்கள் அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து அச்சத்தில் உள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நவம்பர் 9ஆம் தேதி ப்ளான்சாவின் உடல், ஹுவாசோ கடற்கரையில் உள்ளூர் மீனவர் ஒருவரால் கண்டறியப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு, உறுப்புகள் திருடப்பட்டு, சிதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலையை செய்தது யார்? எப்படி உடல் அங்கு வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล