பா.ஜ.க. வில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பா.ஜ.க. ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டது. இதில் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்திருந்தனர். பின்பு சூர்யா சிவா மற்றும் டெய்சி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

News Reels

அப்போது பேசிய டெய்சி, ”இருவரும் பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் சேர்ந்தேன். கண் பட்ட நிகழ்வுபோல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டது. சூர்யா சிவா தனக்கு தம்பி போல தான். உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டது. ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் சூர்யா சிவா, ”நான் பேசியது தவறு தான். இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக எனது விளக்கத்தை அளித்திருக்கிறேன். என் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். செல்போனில் பேசிய எங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டது. பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே, இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. 

திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு தொடர்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล