திருபுவனை,-அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கம்ப்யூட்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அலுவலகத்தில் இருந்த இரண்டு கம்ப்யூட்டர் திருடு போனது.

இதுகுறித்து பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி அளித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருபுவனை போலீசார் ரோந்து சென்றபோது, சாக்கு மூட்டையை துாக்கிச் சென்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அதில், சாக்கு மூட்டையில் இரண்டு கம்ப்யூட்டர்கள் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரை விசாரணை செய்ததில், திருவாண்டார்கோவில், சின்னபேட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வா,19; என்பதும், திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பூட்டை உடைத்து இரு கம்ப்யூட்டர்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதன்பேரில் போலீசார், செல்வாவை கைது செய்தனர். மேலும், அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மானிட்டர்கள் மற்றும் இரண்டு சி.பி.யூ.,க்களை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล