கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் இன்று நான்கு போட்டிகளில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பலவித எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே கத்தாரில் தொடங்க்ப்பட்ட ஃபிபா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா, ஜெர்மனி போன்ற அணிகள் சிறிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியளித்துள்ளன. இந்நிலையில் முதல் சுற்றிலேயே அனைத்து அணிகளும் கவனம் ஈர்த்துள்ள நிலையில் போர்ச்சுகல், பிரேசில் முதலிய அணிகள் இன்று அவர்களது முதல் போட்டிகளில் விளையாடவிருக்கின்றன. கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பையில் முதல் போட்டியில் இன்று களமிறங்கி விளையாட உள்ளார் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ. 

image

ரொனால்டோவின் அணுகுமுறை எப்படி இருக்கும்!

நேற்று மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கப்பட்ட நிலையில், அவரது மனநிலை உலகக்கோப்பையில் கவனம் சிதற வாய்ப்புகள் இருப்பதாக பல கால்பந்து வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் “ மான்செஸ்டர் அணியுடனான விரிசல் போர்ச்சுகலுக்கான எனது ஆட்டத்தை பாதிக்காது” என்று கூறியிருந்தார் ரொனால்டோ.

image

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்காக 356 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 146 கோல்களை அடித்திருந்தார். இந்நிலையில் அணியின் பயிற்சியாளருடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. அணியை விட்டு பிரிந்தாலும், “மான்செஸ்டர் மீதான அன்பு எப்போதும் குறையாது” என்று நீக்கப்பட்ட பிறகு தெரிவித்திருந்தார் ரொனால்டோ.

இன்றைய 4 போட்டிகள்!

image

3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சுவிட்சர்லாந்து-கேமரூன் அணிகள் மோதுகின்றன. 6.30 மணிக்கு உருகுவே-தென் கொரியா, 9.30 மணிக்கு போர்ச்சுகல்-கானா, நள்ளிரவு 12.30 மணிக்கு பிரேசில்-செர்பியா முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *