டோக்கியோ: உலக பாரா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு பிரமோத் பகத், நிதேஷ் குமார், மானசி ஜோஷி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் ‘எஸ்.எல். 3’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத், உக்ரைனின் ஒலெக்சாண்டர் சிர்கோவ் மோதினர். அபாரமாக ஆடிய பிரமோத் பகத் 21–17, 21–19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்க்கார் 15–21, 21–12, 21–9 என, பிரான்சில் மாத்யூ தாமசை வீழ்த்தினார். இந்தியாவின் நிதேஷ் குமார் 21–8, 21–12 என இங்கிலாந்தின் வில்லியம் ஸ்மித்தை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் ‘எஸ்.எல். 3’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மானசி ஜோஷி, தாய்லாந்தின் தருணீ ஹென்பிரைவான் மோதினர். அசத்தலாக ஆடிய மானசி 21–12, 21–17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் பருல் பார்மர் 21–12, 19–21, 21–15 என பிரேசிலின் அவிலாவை வீழ்த்தினார். இந்தியாவின் மன்தீப் கவுர் 21–10, 16–2, 19–21 என உக்ரைனின் ஒக்சானா கொசைனாவிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு ‘எஸ்.எல். 4’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுகந்த் கடம் 21–10, 21–15 என சிங்கப்பூரின் சீ ஹியோங் ஆங்கை தோற்கடித்தார்.
Advertisement