கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியில் வசிப்பவர் பால சுப்பிரமணியன். 67 வயதான இவர், கடந்த 16-ம் தேதி தன்னுடைய பேரனை பேட்மின்டன் வகுப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலை 4.55 மணியளவில், பால சுப்ரமணியன் தன் மருமகளை செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும், அதனால், வீட்டுக்கு வரத் தாமதமாகும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் வீட்டுக்கே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

அதன் பிறகு காவல்துறை பால சுப்ரமணியனைத் தேடத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஜே.பி.நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் முதியவரின் சடலம் கிடப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி அது பாலசுப்ரமணியனின் உடல்தான் என்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பாக காவல்துறை, “பால சுப்ரமணியனுக்கு அவருடைய வீட்டில் வேலை செய்யும் 35 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருந்திருக்கிறது. அதனால், அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பெண்ணிடம் விசாரித்தோம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล