Bengaluru Crime: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் 67 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் கிடந்த 67 வயது ஆணின் உடலை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்த மரணம் குறித்த விசாரணையில் குற்றாவாளியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “அந்த நபர் தனது கள்ளக்காதலியுடன் உடலுறவு கொள்ளும்போது திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாகத் தெரியவந்துள்ளது. போலிஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க உயிரிழந்த கள்ளக்காதலனின் உடலை, பிளாஸ்டிக் பையில் பேக் செய்து கணவனுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் சாலையோரம் வீசியுள்ளனர். 

67 வயதான தொழிலதிபர் 35 வயது உடைய தனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நவம்பர் 16 ஆம் தேதி அன்று வேலைக்காரி வீட்டிற்கு சென்று அவருடன் உடலுறவு கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு படுக்கையில் மரணம் அடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். 

நவம்பர் 16 ஆம் தேதி, ஜே.பி.நகரில் உள்ள புட்டனஹள்ளியில் வசிக்கும் பால சுப்பிரமணியன் (67 வயது), தனது பேரனை பேட்மிண்டன் வகுப்பிற்கு விடுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். மாலை 4.55 மணியளவில், பாலா தனது மருமகளுக்கு போன் செய்து, இன்னும் வேலை முடியாததால், வீடு திரும்ப தாமதமாகும் என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க: கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஆனால் வெகுநேரமாகி அவர் வீடு திரும்பாததால் மருமகள் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது கைபேசி எண் அணைக்கப்பட்டு இருந்துள்ளது. இரவு வரை வீட்டார் காத்திருந்தார். பால சுப்பிரமணியன் வீடு திரும்பவில்லை. இறுதியாக, அவரது மகன் சுப்ரமணிய நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தனது வயதான தந்தையைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

உடலுறவின் போது மாரடைப்பு:
காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது நவம்பர் 17 ஆம் தேதி, ஜேபி நகர் 6 வது கட்டம் அருகே ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சந்தேகத்திற்கிடமான நிலையில் உடல் பிளாஸ்டிக் கவர் மற்றும் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டிருந்தது. விசாரணையில் இறந்தவர் காணாமல் போன பால சுப்பிரமணியன் என தெரியவந்தது. குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இறந்தவர் அடையாளம் காணப்பட்டார். 

மேலும் படிக்க: மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன்..

அதன் பின்னர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் மாரடைப்பால் இறந்ததாக பிரதமர் அறிக்கையில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு போலீசார் இது தொடர்பான விசாரணையில், ​​உயிரிழந்த பால சுப்பிரமணியன், தனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் உறவில் ஈடுபட்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட பெண்:
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில், அந்த பெண் தனது 67 வயது காதலனின் உடலை அப்புறப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது அவர் அளித்த வாக்குமூலத்தில், “போலீசார் தன் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கூடும் என அஞ்சி, மாரடைப்பால் இறந்தவரின் உடலை பாலித்தீன் மற்றும் போர்வையால் போர்த்தி ஜே.பி.நகரில் உள்ள சாலையோரம் வீசினோம். இதற்கு எனது கணவர் மற்றும் சகோதரரின் உதவியை நாடியதாகவும் வாக்குமூலம் அளித்தார். 

பால சுப்பிரமணியன் வேலைகாரப் பெண்ணுடன் நீண்ட நாட்களாக உறவு வைத்திருந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்து செல்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். வயதான பாலாவுக்கு கடந்த ஆண்டுதான் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு:
இதற்கிடையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் கூற்றுகள் உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்த ஆணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி; வீடியோ எடுத்து பகிர்ந்த கணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล