வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்., கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.வில் இணைந்த சுவேந்து அதிகாரியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் இன்று சட்டசபையில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை (நவ., 26) அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினமாக அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி மேற்குவங்க சட்டசபையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும், சுவேந்து அதிகாரியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்தித்து திடீரென பேசினர். அப்போது சுவேந்து அதிகாரி எனது சகோதரரை போன்றவர் என்றார்.

latest tamil news

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சுவேந்து அதிகாரியை, முதல்வர் மம்தா பானர்ஜி தேநீர் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது குறித்து சுவேந்து அதிகாரி கூறியது, அரசியலமைப்பு நாள் விழா அழைப்பிதழில் எனது பெயர் இடம்பெறவில்லை. இந்த விழாவை புறக்கணிக்கப் போகிறேன். தேநீர் அருந்துவதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நான் தேநீர் அருந்தவில்லை. எங்கள் இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் .அரசியல் ரீதியானது அல்ல என்றார். இருப்பினும், காங்கிரஸ் மற்றும் கம்யூ. தலைவர்கள் இந்த சந்திப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக சுவேந்து அதிகாரி உள்ளார். இந்த சூழ்நிலையில் இன்று இருவரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล