ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். படம் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில்   ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை அவர் இயக்குகிறார். 

Lal Salaam

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை கடந்த 5ஆம் தேதி நடந்தது.

Lal Salaam

இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் இந்த ஆடிஷனில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடிஷனானது நாளை (நவம்பர் 25)  காலை 10 மணி முதல் 6 மணிவரை திருவண்ணாமலை கங்கா நகர், செங்கம் ரோட்டில் அமைந்திருக்கும் சே ஸ்டுடியோவில் நடக்கவிருக்கிறது. நடிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | ஷூட்டிங் தொடங்காத தளபதி 67 இவ்வளவு வியாபாரமா?… தலையை பிய்த்துக்கொள்ளும் கோலிவுட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล