புதுடில்லி: நமது நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்து திருத்தி எழுத வேண்டும் எனவும், அதனை யாரால் தடுக்க முடியும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

அசாமில் 17ம் நூற்றாண்டு போர் தளபதி லசித் போர்புகான் 400வது ஆண்டு பிறந்தநாள் விழா டில்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நான் ஒரு வரலாற்று மாணவன். நமது வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக நான் பல முறை கேள்விப்பட்டுள்ளேன்.

நாம் அதை சரிசெய்ய வேண்டும். நமது வரலாற்றை திருத்தி, பெருமையுடன் எழுதுவதை யாரால் தடுக்க முடியும்? சுதந்திர போராட்டத்தில் தாய்நாட்டிற்காக போராடியவர்களின் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.

latest tamil news

வரலாற்றை திருத்தி எழுதினால் பொய் தானாவே மறைந்துவிடும். இங்கு இருக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பல்கலை பேராசிரியர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாட்டில் 150 ஆண்டு காலம் ஆட்சி செய்த 30 பேரரசுகளை ஆய்வு செய்யுங்கள்.

அதேபோல், விடுதலைக்காக போராடிய 300 வீரர்களை கண்டறிந்து ஆய்வு செய்யுங்கள். உண்மையை ஆய்வு செய்து வரலாற்றை திருத்தி எழுதுங்கள். இந்த ஆய்வுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *