ஜம்மு: பாகிஸ்தான் எல்லையில் இருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆள் இல்லா விமானம்வாயிலாக அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணக்கட்டுகளை, ஜம்மு – காஷ்மீர் போலீசார் நேற்று கைப்பற்றினர்.

இது குறித்து சம்பா மாவட்ட சீனியர் எஸ்.பி.,அபிஷேக் மகாஜன் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கப்பால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ட்ரோன் வாயிலாக ஒரு மரப்பெட்டி நம் பகுதியில் வீசப்பட்டது. உள்ளூர் மக்கள் தந்த தகவலை வைத்து, இதிலிருந்து வெடிபொருட்கள், இரண்டு சீன பிஸ்டல்கள், தோட்டாக்கள், மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

latest tamil news

இந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம். ஆனால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: